கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1600 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

கோவை: கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று இயக்கப்பட்ட 32வது ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1600 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை: கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று இயக்கப்பட்ட 32வது ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1600 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கோவையில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கோவையில் இருந்து பீகார் மாநிலத்திற்கு இன்று மதியம் 1.45 மணிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1600 பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக காலை 11 மணியளவில் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்பட்டு, சிறப்பு ரயிலில் தனி மனித இடைவெளியுடன் அமர வைத்து உணவு, தண்ணீர், முககவசம் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையின் கூட்டு முயற்சியால் தற்போது வரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் ஒரு ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று மாலை கோவையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...