நீலகிரி: நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம், பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில் மதிய உணவு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தில், சி.எப்.எல்.யூ,டிஎப்எல்யூ, பி.எம்.எஸ் ஊழியர் சங்கத்தை சேர்ந்த அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் பாதுகாப்புத்துறையினை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும், உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும், தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.