கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை வீசி சென்ற மர்ம நபர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சலீவன் வீதியில் உள்ள இரு கோவில்கள் முன்பு பன்றி இறைச்சியை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சலீவன் வீதியில் வேணுகோபால சாமி கோவில் மற்றும் ராகவேந்திரா கோவில் ஆகியவை அடுத்தடுத்து உள்ளது.



இந்த கோவில் வாசல் முன்பாக இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வீசி சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு அருகில் இருப்பவர்கள் கோவில் படிக்கட்டுகளில் இறைச்சி வீசப்பட்டு இருப்பதை கண்டு வெரைட்டி ஹால் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்துத்துவ அமைப்பினர் கோவில் வாசலில் பன்றி இறைச்சியை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.



இதனை தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை மேற்கொண்டார். கோவில் அருகில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனையடுத்து, கோவில் முன்பாக வீசப்பட்டு இருந்த இறைச்சி அகற்றப்பட்டு கிருமி நாசினி, மஞ்சள் தெளிக்கப்பட்டது. கோவில் முன்பு இறைச்சியை வைத்து சென்றவர்கள் யார் என்பது குறித்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...