கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளமான வால்பாறைக்கு ஆண்டு தோறும் தமிழகம், கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வால்பாறை, ரொட்டிக்கடை மற்றும் சோலையார் அணை பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.

இந்நிலையில், தங்கும் விடுதி உரிமையாளர்களுடன், காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி விளக்கினார்.
அப்போது பேசிய அவர், சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய விபரங்களை தங்கும் விடுதி உரிமையாளர்கள் பதிவேடுகளில் கண்டிப்பாக பதியவேண்டும், அவர்களின் விலாசங்கள் மற்றும் மொபைல் எண்கள் பதிவு செய்வதோடு அதன் உண்மைத்தண்மை பற்றி ஆதார் கார்டு மற்றும் ஓட்டினர் உரிமம் நகல் எடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், என தெரிவித்தார்.

மேலும், தங்கும் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நடமாடும் பகுதியில் கண்கானிப்பு கேமரா பொருத்தியிருப்பதோடு அதன் பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, காவல்துறையினர், 50க்கும் மேற்பட்ட தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.