நீலகிரி: குன்னூரில் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி: குன்னூரில் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் காணிக்கராஜ் நகர் அருகே சாலை ஓரத்தில் இருந்த மரம் ஒன்று திடீரென்று சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் பணியாளர்கள் முரளி, நித்யானந்தம், சேகர் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்தில் மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. சாலையில் மரம் விழுந்த போது எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.