கோவை: கோவையில் நிர்வாணப் படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் நாடகமாடிய பெண் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் நிர்வாணப் படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் நாடகமாடிய பெண் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி காமதேனு நகர் பகுதியில் வசித்து வருபவர் சாந்தி(51) மற்றும் இவரது மகள் சத்தியா(29) இருவரும் மகளிர் குழுவ உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 22ம் தேதி பழைய இரு சக்கர வாகனம் வாங்க பணம் தேவைப்படுவதாக சாந்தியிடம் சத்தியா 10,000 ரூபாய் கேட்டு உள்ளார்.
பணம் பெற்று கொள்ள சாந்தி கூறியிருந்த நிலையில் தனக்கு தெரிந்த ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வரும் பிரதீப்குமார்(37) என்பவரை வாகனம் வாங்குவது தொடர்பாக வர சொல்லி அழைத்துள்ளார். அன்று மதியம் இரண்டு மணி அளவில் பிரதீப்குமார் சாந்தியின் வீட்டிற்கு வந்தபோது, அவர் பின்னலேயே முகமூடி அணிந்த நிலையில் வீட்டின் உள்ளே நுழைந்த ஐந்து நபர்கள் கதவை பூட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பிரதீப்குமார், சாந்தி, சத்தியா ஆகியோரிடம் இருந்து பன்னிரெண்டரை பவுன் தங்க நகை, செல்போன், பணம் எட்டாயிரத்தை கொள்ளை அடுத்தவர்கள் சத்தியா மற்றும் பிரதீப்குமாரை நிர்வாணமாக்கி புகைபடம் எடுத்து உள்ளனர். இது குறித்து யாரிடம் சொல்ல கூடாது என மிரட்டியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் இது குறித்து பிரதீப்குமார் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பணத்தை கொள்ளையடிக்க சத்தியா மூளையாக செயல்பட்டு திட்டமிட்டு கூட்டாளிகளுடன் கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் அவருடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.