நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 1184 பேர் 40 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 1184 பேர் 40 பேருந்துகளில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த வட மாநில இளைஞர்கள் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 1184 பேரை ஜார்கண்ட் மற்றும் சத்திஷ்கர் மாநிலத்திற்கு தமிழக அரசு சார்பாக மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்தது.
மொத்தம் 40 பேருந்துகளில் வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா உத்தரவு படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாபிரியா தலைமையில் மேற்பார்வையில் துணை ஆட்சியர் கண்ணன், தாசில்தார் ரவிக்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வட மாநில இளைஞர்களை வழி அனுப்பி வைத்தனர்
இவர்கள் மேட்டுபாளையம் வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்புகின்றனர். பேருந்துகளில் இரண்டு கிராம அதிகாரிகள் உடன் சென்றனர்.