கோவையில் சொத்து பிரச்சனை காரணமாக மதுபோதையில் தாய் கண்முன்னே அண்ணனை, தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் சொத்து பிரச்சனை காரணமாக மதுபோதையில் தாய் கண்முன்னே அண்ணனை, தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலணி அருகே உள்ள கே.கே.புதூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து, பழனியம்மாள் தம்பதியினரின் மகன்கள் அழகுராஜா(55) மற்றும் சேகர்(53). கூலி வேலைக்கு சென்று வரும் இருவரும் கே.கே.புதூர் பகுதியில் தனது தாய் பழனியம்மாளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு அதேபகுதியில் ஒருவரின் இறப்பிற்கு சென்று வந்த சேகர் மதுபாட்டில்களை வாங்கி வந்ததோடு தனது அண்ணன் அழகுராஜாவுடன் இணைந்து மது அருந்தியுள்ளனர். சகோதரர்கள் இடையே சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த சேகர் தனக்கு தெரியாமல் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறி வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் அழகு ராஜா இதனை மறுத்த நிலையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் சேகர் அருகில் இருந்த கத்தியை எடுத்து அழகுராஜாவின் நெஞ்சில் குத்தியதில் படுகாயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்தில் சரிந்தார்.
இதனை கண்ட அவர்களின் தாயார் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் திரண்டு உயிருக்கு போராடிய அழகுராஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அழகுராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சேகரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நீண்ட நாட்களாக அண்ணாநகர் பகுதியில் இருக்கும் வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரக்கேட்டதாகவும் ஆனால் தாயும் அண்ணனும் இருவரும் தொடர்ந்து மறுத்து வந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சேகரை நீதிபதி முன் ஆஜர்படுத்திய போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோவையில் சொத்து பிரச்சனையில் மதுபோதையில் தனது உடன்பிறந்த சகோதரரை, தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.