மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழை..! வேரோடு சாய்ந்த பப்பாளி மற்றும் வாழைமரங்களால் விவசாயிகள் கவலை!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரடபட்டிருந்த பப்பாளி மரங்கள் மற்றும் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் பெய்த கன மழையால் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரடபட்டிருந்த பப்பாளி மரங்கள் மற்றும் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதில் காரமடை மேற்கு பகுதியில் உள்ள காளம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட முகலாம் பாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ஒரு ஏக்கர் பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமானது.



முகலாம்பாளையத்தை சேர்ந்த வெள்ளிங்கிரியம்மாள் என்பவர் தனது 1 ஏக்கர் தோட்டத்தில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றால் பப்பாளி மரங்கள் அனைத்தும் வேரோடு முறிந்து சேதமானது. ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை செலவு செய்து பயிர்செய்யப்பட்ட பப்பாளி முழுவதும் சாய்ந்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல், தேக்கமபட்டியில் பயிரிடப்பட்டிருந்த 5 ஆயிரம் வாழை மரங்கள் மற்றும் கெம்மாரம்பளையம் ஊராட்சி மேட்டூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் மாட்டுக்கொட்டகை நேற்று இரவு பெய்த பலத்த சூறாவளி காற்றால் மேற்கூரை முழுவதும் காற்றில் தூக்கி எரியப்பட்டன. தொடர்ந்து இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் இழப்பினை சந்தித்து வரும் நிலையில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...