வால்பாறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் ஆலோசனை!

கோவை: வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.


கோவை: வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 100க்கும் மேற்பட்ட ஆம்னி வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், வால்பாறையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் மகேஸ்வரி காந்தி சிலை வளாகத்தில் வால்பாறை ஆம்னி மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓட்டுநர்கள் முறைப்படியான ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் பதிவு சான்றிதழ், காப்பீட்டுதிட்ட சான்றிதழ்களை முறையாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி வாகனத்தை இயக்க வேண்டும், இப்பகுதிக்கு புதிதாக வரும் நபர்கள் சந்தேகப்படும்படி இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறின்றி நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து ஓட்டுநர்கள் சங்கத்தலைவர்கள் பேசியபோது, போதுமான வாகன நிறுத்துமிடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். இந்த கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், முஜீப், காவல்துறையினர், ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் சந்தோஷ் உட்பட 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...