கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளிலுள்ள கடைகளில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளிலும், மத்திய மண்டலம், தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மேற்கு மண்டலம், பூ மார்க்கெட் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ.இலட்சுமணன் அவர்கள், உதவி ஆணையர்கள் (மேற்கு) ஏ.ஜே.செந்தில்அரசன் அவர்கள், (மத்தியம்) மகேஷ்கனகராஜ் அவர்கள், செயற்பொறியாளர் (திட்டம்) மேற்கு மண்டலம் எஸ்.ரவிச்சந்திரன் அவர்கள், செயற்பொறியாளர் (ஸ்மாட் சிட்டி) சரவணக்குமார் அவர்கள், உதவி நகரமைப்பு அலுவலா்கள் செந்தில்பாஸ்கர், சத்தியா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனர்.