திருப்பூரில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் தொழிலாளர்களிடம் வீட்டு வாடகை கேட்டு உரிமையாளர்கள் வலியுறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டு வலியுறுத்தி வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதேபோல், வங்கிகளில் பெற்ற கடனுக்கு தவணைகள் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களிடம் வங்கிகள் நிலுவை தொகையை கேட்டு வலியுறுத்தக் கூடாது என திருப்பூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் மன்சூர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...