திருப்பூர்: திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கூடுதல் வட்டி விதிப்பதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் கூடுதல் வட்டி விதிப்பதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வேலை இல்லாத காரணத்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதம் கடன் கட்ட வேண்டியதில்லை என அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், திருப்பூரில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் நிலுவை தொகையை கட்ட வலியுறுத்துவதாகவும் அவர்களுக்கு கூடுதல் வட்டி விதிப்பதாகவும் குற்றம் சாட்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.