கோவை: வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இன்று பதிவாகும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோல, வட மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் மே 31ம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.