சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயினை கேரள அரசு அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த கோரி தபெதிக அமைப்பினர் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயினை கேரள அரசு அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த கோரி தபெதிக அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: சிறுவாணி அணையில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயினை கேரள அரசு அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த கோரி தபெதிக அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள வனப்பகுதிக்குள் அமைந்துள்ள சிறுவாணி அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தமிழக அரசு பராமரிப்பு செலவுகளை செய்து வருகிறது.

சிறுவாணி அணையில் வறட்சி காலங்களில் தண்ணீர் எடுக்க பயன்படும் நிலத்தடியில் உள்ள ஒரு குழாயை கேரள அரசு கடந்த 2014ம் ஆண்டு மூடியது. இந்நிலையில், மற்றொரு குழாயினை மூடும் பணிகளை கேரள அரசு செய்து வருகிறது.



வறட்சி காலங்களில் தண்ணீர் எடுக்க பயன்படும் குழாயை அடைக்கும் கேரள அரசின் பணிகளை தடுத்து நிறுத்த கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

ஊரடங்கை பயன்படுத்தி கேரள அரசு குழாயினை மூடுவதாகவும் இதனால் வறட்சி காலங்களில் கோவையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அணைக்கு செல்ல விடாமல் கேரள அதிகாரிகள் தடுப்பதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கேரள அரசின் குழாய் அடைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...