கோவை: கோவை மாவட்டத்தில் மேல்நிலை மார்ச் 2020 விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி முன்று முகாம்களில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கோவிட்19 தொற்று தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கூடுதலாக 8 மதிப்பீட்டு மையங்கள் அமைத்து மொத்தம் 11 மையங்களில் நாளை (27.05.2020) முதல் மதிப்பீட்டு பணி நடைபெறுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் மேல்நிலை மார்ச் 2020 விடைத்தாள் மதிப்பீட்டுபணி முன்று முகாம்களில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது கோவிட்19 தொற்று தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கூடுதலாக 8 மதிப்பீட்டு மையங்கள் அமைத்து மொத்தம் 11 மையங்களில் நாளை (27.05.2020) முதல் மதிப்பீட்டு பணி நடைபெறுகிறது.
இப்பணியில் 375 முதன்மைத் தேர்வாளர்கள் (Chief Examiner), 375 கூர்ந்தாய்வு அலுவலர்கள் (Scrutiny Officer) 2250 உதவித் தேர்வாளர்கள் (Assistant Examiner) மற்றும் 200 அலுவலக பணியாளர்கள் என மொத்தம் 3200 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன் மதிப்பீட்டு முகாம்களில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு அனைத்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் ஒரு நாளைக்கு இருமுறை கிருமிநாசினிகள் தெளித்திடவும், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சானிடைசர் கழிவறைகளை மூலம் நான்கு முறை சுத்தம் செய்யவும் மற்றும் அனைத்து சுகாதரா பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம்! மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சிகள் /௨ளரக உள்ளாட்சித் துறை / சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலை மார்ச் 2020 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நாளை (27.05.2020) முதல் கோவை மாவட்டத்தைச் சார்ந்த 1650 ஆசிரியர்கள் எவ்வித சிரமமின்றி மதிப்பீட்டு முகாம்களுக்கு சென்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக 44 வழித்தடங்களில் 74 பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களை ஒருங்கிணைக்க பேருந்துக்கு தலா ஒருவர் வீதம் 74 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு அனைத்து ஆசிரியர்கள் பணியாளர்களுக்கு முகக் கவசங்கள், கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு 1 முதன்மைத் தேர்வாளர், 1 கூர்ந்தாய்வு அலுவலர் மற்றும் 6 உதவித் தேர்வாளர்கள் என 8 பேர் கொண்ட ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு மையங்களில் உடற்கல்வி இயக்குநர் / ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மற்றும் பாரத சாரணர் சாரணியர் படை ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு ஆசிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல் முகக் கவசம் அணிந்திருத்தல், கிருமிநாசினி மற்றும் கை கழுவும் திரவம் முறையாக பயன்படுத்துதல், பள்ளி வளாகம் வகுப்பறைகளில் சுத்தம் செய்யப்படுவதையும் கிருமிநாசினிகள் தெளித்திக்கபடுவதையும், கண்காணிக்க தலா 6 பேர் கொண்ட குழு அனைத்து மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களுக்கு தலா 2 காவலர்கள் வீதம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பாதுகாப்பு அளிக்க மாநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் மூலம் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், தலைமையில் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரதுறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேல்நிலை பொதுத்தேர்வு மதிப்பீட்டு மையங்கள்:
*பொள்ளாச்சி
முகாம் (பி.கேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி)
1. சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
2. சுபாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
3. பி.வி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*கோவை
முகாம் (பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி)
1. அவிலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
2. சிந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
3. நேரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
4. லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*எஸ்.எஸ்.குளம்
முகாம் (பிர்லியன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி)