திருப்பூர்: திருப்பூரில் கோவிலை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு சூடம் ஏற்றி நூதன போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் கோவிலை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோவில் முன்பு தோப்புக்கரணம் போட்டு சூடம் ஏற்றி நூதன போராட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவலை தவிர்க்க மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் அரசு கோவில் வழிபாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் தோப்புக்கரணம் போட்டு சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மதுபான கடைகளை திறக்கும் அரசு வழிபாட்டுத் தலங்களை திறந்திட வேண்டும் என வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபடுவதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.