விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு அறிக்கை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்தும் கைவிட கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். "காலம் காலமாக நாட்டை காப்பவன் விவசாயி, ஆனால் விவசாயியின் வயிற்றில் அடிப்பது BJP", "ஆசை வார்த்தைகள் கூறி ஓட்டு வாங்கி மோசம் செய்தது மத்திய அரசு" என கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்ய அறிக்கை பிறப்பித்ததுள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் விவசாயிகள் தான் இந்த நாட்டை தலைநிமிரச் செய்யும் தூண்களாக செயல்பட்டு வருகின்றனர் எனவும் இதனை கெடுக்க மத்திய அரசு நினைத்து வருகின்றது. இதனை ஒருநாளும் காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக ஐந்து பேர் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சமூக இடைவெளி பின்பற்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வீனஸ் மணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...