கோவையில் கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போட்டு கோவில்களை திறக்க நூதன முறையில் அரசுக்கு கோரிக்கை வைத்த இந்து முன்னணி அமைப்பினர்..!

கோவை: கோவில்களை திறக்க அனுமதிக்க கோரி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போட்டு நூதன முறையில் கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.


கோவை: கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போட்டு நூதன முறையில் கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வழிபட்டு உரிமைகளை மீட்க வரும் 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக் கரணம் போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் உள்ள நிலையில் பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோவில்களில் கூட்டம் வருவது குறைவான ஒன்று எனவும் சில கோவில்கள் தனியார் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கிராம கோவில்களில் வரக்கூடிய கூட்டம் குறைவாக தான் இருக்கும் என்பதால் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட வழிமுறைகளை பின்பற்றி அரசு அதிகாரம் வழங்கலாம் என தெரிவித்து இருந்தார். கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவும் இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை கொடுத்து இருந்தார்.



இந்த நிலையில், கோவையில் கோனியம்மன் கோவில், லக்‌ஷ்மி நரசிம்மன் கோவில், காந்திபார்க் முருகன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட இருபது இடங்களில் இந்து முன்னணியினர் தோப்புக் கரணம் போட்டு கோயில்களை திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...