சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி! இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதி!

கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவையில் உள்நாட்டு விமான போக்குவரத்து நேற்று முதல் துவங்கியது. கோவை விமான நிலையத்திற்கு நேற்று சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து நான்கு விமானங்கள் வந்தன. இவற்றில் மொத்தம் 360 பயணிகள் கோவை வந்தனர். விமான நிலையத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சோதனை முடிவுகள் தெரியவந்தது.

இதில் விமானம் மூலம் வந்த 300 பேரின் பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை வந்து தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவை வந்திருந்தார். அந்த இளைஞர் உடன் வந்த மற்ற பயணிகளுக்கு தொற்று இல்லாத நிலையில் அவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் கடந்த 23 நாட்களுக்கு பிறகு தொற்று ஏற்பட்டிருந்தாலும் தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாக கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே அவர் சேர்க்கப்படுவார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...