கோவையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி 🔥 மனைவியை கொலை செய்த கணவன்!

கோவை: கோவை ஈச்சனாரி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோட் லால். இவரது மனைவி சகுந்தலா (36). இத்தம்பதியினர் கோவை ஈச்சனாரி கணேசபுரம் பகுதி விநாயகர் கோவில் பகுதியில் வசித்து வருகின்றனர். சோட் லால் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோட் லால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து உள்ளார். இதில் சகுந்தலாவின் உடலில் தீ பற்றியதில் வலி தாங்க முடியாமல் அலறினார்.

வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்ததை கண்டும், சகுந்தலாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். சோட் லாலுவுக்கு இரு கைகளில் பலத்த தீ காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து, சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...