கோவை: வால்பாறையில் இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வட்டாட்சியர் வழங்கினார்.
கோவை: வால்பாறையில் இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வட்டாட்சியர் வழங்கினார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஊரடங்கு தடை உத்தரவு காரணமாக எவ்வித நிகழ்ச்சிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நாதஸ்வரம், மிருதங்கம் உட்பட்ட இசைக்கலைஞர் குடும்பத்தினருக்கு ராஜ்குமார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சார்பில் 50 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி மற்றும் நிவாரண பொருட்களை வால்பாறை வட்டாட்சியர் ராஜா, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி வழங்கினர்.
வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் மிருதங்க வித்வான் ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வால்பாறை வட்டாட்சியர் ராஜா, காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இசைக்கலைஞர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.