கோவையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் துவங்கியது!

கோவை: இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் துவங்கியது.


கோவை: இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமான சேவை இன்று மீண்டும் துவங்கியது.

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமான சேவை இன்று துவங்கியது. கோவை விமான நிலையத்திற்கு இன்று காலை 65 பயணிகளுடன் டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. அதனை தொடர்ந்து, 70 பயணிகளுடன் சென்னையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் கோவை வந்தடைந்தது.



விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. 5 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் விமான நிலைய வளாகத்துக்குள் முகாமிட்டு வரக்கூடிய பயணிகளை பரிசோதித்து வருகின்றனர். பயணிகள் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களின் கைகளில் சீல் வைக்கப்படுகின்றது.

பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் முடிவு வரும் வரை தனிமைபடுத்தி கொள்ள பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். விமானத்தில் வரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் அரசின் தனிமை படுத்தும் மையங்களில் தனிமை படுத்தப்படுகின்றனர்.

அதேபோல, ஓட்டல்களில் தங்க விரும்புவர்களை மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரைப்படி இருக்கும் ஓட்டங்களில் தங்க அனுமதிக்கின்றனர். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் பாசிட்டிவ் என இருந்தால் அவர்களை மருத்துவமனைக்கும், நெகட்டிவ் என வந்தால் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேபோன்று வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் கைகளில் சீல் வைத்து வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் குறித்த தகவல் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்த பயணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து இல்லாததால் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி இருந்ததாகவும் விமான போக்குவரத்து தற்போது துவங்கியதால் சொந்த ஊருக்கு திரும்பி இருப்பதாகவும் விமான பயணிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு இயக்க திட்டமிட்டு இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கும், பின் கோவையில் இருந்து அதே ஊர்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...