கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக அமர்த்து சிறப்பு தொழுகை!

கோவை: கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக அமர்த்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் வீடுகளில் சிறு சிறு குழுக்களாக அமர்த்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை எனப்படும் ஈகைத் திருநாள், பக்ரீத் பண்டிகை எனப்படும் தியாகத் திருநாள் ஆகிய இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கோவையில் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பெருநாட்களில் பள்ளி வாசல்களில் அனைவரும் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையானது ரத்து செய்யப்பட்டு, எளிய முறையில் வீடுகளில் தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இதனையடுத்து, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உக்கடம், ஜி.எம்.நகர், கரும்புகடை, குனியமுத்தூர், கோட்டைமேடு, சாரமேடு, போத்தனூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே இன்று காலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.



10 முதல் 15 பேர் வரை ஒவ்வொரு வீட்டு மாடியிலும் தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

கொரோனா காரணமாக முதல் முறையாக வீடுகளில் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு தொழுகை நடத்துவதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.



புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இன்றைய தினத்தில் ஏழைகளுக்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து இந்த பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடி வருவதாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். தங்கள் இல்லங்களில் செய்யப்படும் உணவு வகைகளை சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...