கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை!

கோவை: கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக மது போதையில் தூக்கு போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஜே.ஜே நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் குமார்(38). இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் பிரதீப் குமார் மது போதைக்கு அடிமையாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. மது போதையை மறக்க பிரதீப் குமாரை கோவில் பாளையம் பகுதியில் உள்ள மறு வாழ்வு மையத்தில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று கோவில் பாளையம் மறு வாழ்வு மையத்தில் இருந்த பிரதீப் குமார் அங்கிருந்த தப்பித்து தனது வீடு உள்ள இடையர்பாளையம் பகுதிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த காவேரி பிரதீப்குமாருடன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அவரின் மனைவி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த துடியலூர் காவல் நிலைய போலீசார் பிரதீப் குமார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் அவர் மதுபோதையில் இருந்ததால் காவேரியிடம் கணவனை அழைத்து கொண்டு காலையில் காவல் நிலையம் வரும்படி கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப்குமார் தனது மனைவியிடம் மீண்டும் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவேரி மீண்டும் காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அங்கு வந்த போலீசார் பிரதீப்குமார் இல்லாததால் திரும்பி சென்றனர். இந்நிலையில், மனைவியிடம் சண்டை போட்டு சென்றவர் மதுபோதையில் என்ன செய்வது? எங்கே தங்குவது? என தெரியாமல் இடையர்பாளையம் சுடுகாடு பகுதிக்கு வந்தவர் அங்கு தூக்கி மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் தூக்கில் ஒருவர் தொங்குவதாக அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தூக்கில் தொங்கியவர் பிரதீப்குமார் என்பது உறுதிப்படுத்தினர். இதனை தொடர்ந்து உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...