கோவை: கோவை செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் செஞ்சேரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நார் தொழிற்சாலைகளிலிருந்து தென்னை நார் வெளிநாடுகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இந்த தென்னை நார் தொழிற்சாலைகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன கால்வாயின் அருகே தோப்புகளை விலைக்கு வாங்கியுள்ளனர். இரவு நேரங்களில் பிஏபி கால்வாயில் இருந்து குழாய் மூலம் தண்ணீரை தங்களது கிணற்றிற்குள் விட்டு திருடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
தென்னை நார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் சுத்தகரிப்பு செய்யாமலே அருகிலுள்ள குட்டைகளில் எந்த வித அனுமதியுமின்றி தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், குடிநீர் அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப பலமுறை சொல்லியும் நிறுவனம் கண்டுகொள்ளாததால் சுற்றுப்புறச்சுழல் சீர்கேடு அடைந்து வருவதால் வாழ தகுதியற்ற ஊராக மாறி வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தென்னை நார் ஆலைகளில் இருந்து காற்றின் மூலம் பரவும் கழிவுத்துகள்கள் வீடுகளில் படர்வதால், கடும் அவதிக்கு உள்ளவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். மேலும், குழந்தைகள் தென்னை நார் கழிவுத்தூகள்களால் பாதிக்கப்படுவதாக கூறி தன்னுடைய மருமகள்கள் அவர்களது அம்மா வீட்டிற்கு சென்று விட்டதாக வயதான பெண்மணி தெரிவித்தார்.
இப்பகுதி மக்கள் தங்களுக்கு காய்ச்சல், சளி இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளை தென்னை நார் தொழிற்சாலைகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், செஞ்சேரிமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள தென்னை நார் ஆலைகளின் விதிமீறல்களை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொது மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.