திருப்பூரில் உள்ள‌ நகை அடகு நிறுவனத்தில் அரிவாளை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த நபர் கைது -- பணம் மற்றும் நகை மீட்பு !!

திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு கடை (அட்டிகா கோல்டு லோன்) நிறுவனத்திற்க்குள் கடந்த செவ்வாய்கிழமை சென்ற நபர், கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து லாபகமாக தப்பி சென்றான்.


திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் அமைந்துள்ள தனியார் நகை அடகு கடை (அட்டிகா கோல்டு லோன்) நிறுவனத்திற்க்குள் கடந்த செவ்வாய்கிழமை சென்ற நபர், கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி 10 சவரன் நகை, 20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து லாபகமாக தப்பி சென்றான்.

இந்த காட்சிகள் கடையினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பாதிவாகியிருந்த நிலையில், அக்காட்சிகளை கொண்டு திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, இன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அவ்வழியே வந்த நபரை மரித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு சோதனை நடத்தியதில் நகை மற்றும் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவரின் பெயர் அழகுவேல் என்பதும் சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை திருப்பூர் குமரன் சாலையில் உள்ள நகைக்கடையில் அரிவாளை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் பறித்து சென்றது இந்த நபர் என விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அழகுவேல் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் 14 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட அழகுவேல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வேலம்பாளையம் பகுதியில் ஹெல்மட் அணிந்தவாறு ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்து உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...