கோவை மக்கள் சேவை மையம் சார்பில் 'மோடி கிட்' நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி - வேத மந்திரங்கள் ஓதி நிவாரணம் பெற்று சென்ற கோவில் பூசாரிகள்!

கோவை: கோவை மக்கள் சேவை மையம் சார்பில் "மோடி கிட்" நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மக்கள் சேவை மையம் சார்பில் "மோடி கிட்" நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது.



இதில் சிறு கோவில் பூசாரிகள் 300 பேருக்கு பருப்பு, சர்க்கரை, உப்பு, ரவை, சோப்பு,சாம்பார் பொடி மற்றும் 5 கிலோ அரசி உள்ளிட்ட பொருட்களை பா.ஜ.கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வழங்கினார். மந்திரங்கள் ஓதி கோவில் பூசாரிகள் பொருட்களை வாங்கி சென்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்: பேரிடர் காலத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் அதன் அமைப்புகள் சார்பில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உள்ளதாகவும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் குறைந்தது ஐந்து பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, மோடி கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டதாக தெரிவித்த அவர், இதன் பின்னர் மோடி கிட் என்ற பெயரில் ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது எனவும் பாஜக சார்பில் 40 லட்சம் மக்கள் வழங்கி உள்ளதாக தெரிவித்த அவர் இன்று 300 பேருக்கு மோடி கிட் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

ஏற்கனவே, ஆயிரத்து 500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக நாளையும் கிராமப்புற இளைஞர்களுக்கு மோடி கிட் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளது திராவிடக் கட்சிகளில் இருந்து மாற்றத்தை வேண்டுபவர்கள் அந்த சித்தாந்தத்தை ஒட்டி இருக்கக் கூடிய கட்சியில் இணைவது வாடிக்கையான ஒன்று என தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவின் மற்றும் மோடி அவர்கள் மீதும் மக்கள் மத்தியில் நல்ல அபிமானமும் மரியாதையும் உள்ளது. அதனால் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வருவதாக தெரிவித்தார்.

அதேபோல, பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பிரசாரம் செய்த காரணமாக ஆர் எஸ் பாரதி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும், இதனை திமுக பேச்சாளருக்கான எச்சரிக்கையாக பார்த்ததாக தெரிவித்த அவர், திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழக்கு பதிவிட்டுள்ளது என்றார்.

மேலும், கொரோனா தொற்றை காரணம் காட்டி வேலையை விட்டு நீக்குவது சரியானது அல்ல எனவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...