பல்லடம் அருகே குவியல் குவியலாக போதை மிட்டாய்கள் மற்றும் ஹான்ஸ் பொருட்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை!

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கடையில் குவியல் குவியலாக போதை மிட்டாய்கள் மற்றும் ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கடையில் குவியல் குவியலாக போதை மிட்டாய்கள் மற்றும் ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வட மாநிலத்தவரின் கடையில் போதை மிட்டாய்கள், புகையிலை விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள வடமாநிலத்தவரின் கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அதிரடியாக கடைக்கு சென்ற மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் உள்ளிட்ட போதை தரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.



பின்னர் கடையில் இருந்த ஒடிசாவை சேர்ந்த மிரித்தின் ஜே ராவத் மற்றும் பிரசாந்த், ராஜா ஆகிய மூவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கடைக்கு அருகே தனியாக குடோன் வாடகைக்கு எடுத்து போதை சாக்லேட்கள், ஹான்ஸ் மற்றும் பல்வேறு போதை தரும் பாக்குக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



இதனை அடுத்து குடோனுக்கு சென்று சோதனை மேற்கொண்டதில் குவியல் குவியலாக இருந்த போதை சாக்லெட் உள்ளிட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



இதனையடுத்து குடோன் மற்றும் கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பிடிபட்ட மூவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆய்விற்காக பிடிபட்ட பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவிற்கு பிறகு மூவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...