கோவையில் அரசு விதித்த நிபந்தனைகளுடன் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க துவங்கியது

கோவை: தமிழக அரசு விதித்த நிபந்தனைகளுடன் கோவையில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க துவங்கியது.


கோவை: தமிழக அரசு விதித்த நிபந்தனைகளுடன் கோவையில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க துவங்கியது.

கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்திற்கு மத்திய மாநில அரசுகள் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் சில தளர்வுகளுடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

ஆட்டோக்கள் மற்றும் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.



இதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர் உக்கடம், சாய்பபாபகாலனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள ஆட்டோக்கள்.

பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்து கொண்டு வரும் பயணிகளுக்கு கைகளில் பயன்படுத்தி, முக கவசம் போன்ற முக்கிய விதிமுறைகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தியும் வருகின்றனர். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருமாறு ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...