கோவையில் நாயை கட்டி போட்ட போது ஏற்பட்ட தகராறில் கணவருக்கு கத்திக்குத்து! மனைவி மீது சரமாரி தாக்குதல்

கோவை: கோவையில் நாயை கட்டி போட்ட போது ஏற்பட்ட தகராறில் கணவரை கத்தியால் குத்தியும், மனைவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் நாயை கட்டி போட்ட போது ஏற்பட்ட தகராறில் கணவரை கத்தியால் குத்தியும் மனைவி மீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அடுத்த சிறுமுகை எடுகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி(45). இவரது மனைவி சாந்தாமணி. இவர்களது பேரன் முகேஷ் அருகில் வசிக்கும் சேகர் என்பவரது வீட்டில் உள்ள நாயின் கழுத்தில் கயிறு கட்டி அதனை இழுத்துள்ளான்.

இதனை கண்ட சேகரின் மனைவி முகேஷை கண்டித்து கையால் அடித்து உள்ளார். இது குறித்து முகேஷ் தனது தாத்தா-பாட்டியிடம் கூற சேகரின் வீட்டுக்கு சென்றவர்கள் இது தொடர்பாக கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாந்தாமணி நடவடிக்கை குறித்து அவதூறாக ஷோபனா பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சோபனாவின் உடன்பிறந்த சகோதரர்கள் ரவி மற்றும் ஜெயராஜ் சகோதரிக்கு ஆதரவாக பேசி உள்ளனர். வாக்குவாதம் முற்றவே ஜெயராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தியதுடன் மரகட்டை கொண்டு சாந்தாமணியை தாக்கி உள்ளார். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே போல், தன்னை பேனா கத்தி கொண்டு தாக்கியதாக சேகர் அளித்த புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவி அளித்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் சேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேகரின் மனைவி ஷோபா தலைமறைவாக உள்ளார்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...