நீலகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி!

நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த காவலர்களுக்கு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.


நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 50 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த காவலர்களுக்கு மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற சிறப்பு மலர் கண்காட்சியினை கண்டு ரசித்தனர்.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசன் காலமாகும். இந்த இரு மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்து செல்வது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்தநிலையில், இந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் காவல் துறையினர் பல்வேறு மன இறுக்கத்திற்கு ஆளாகினர்.



இந்த நிலையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தலைமையில் காவல் துறையினருக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்ட ஒரு லட்சம் வண்ண மலர்களை காவல் துறையினர் கண்டு ரசித்தனர்.



தாவரவியல் பூங்காவிற்கு வருகை தந்த அனைவரையும் தோட்டக்கலைத்துறை, பூங்கா ஊழியர்கள் கைகளைத் தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். 150 ரகங்களில் பூத்துக்குலுங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்களை காவல் துறையினர் கண்டு ரசித்து சென்றனர்.

ஏற்கனவே சுகாதாரப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் கண்டு ரசித்து சென்ற நிலையில் காவலர்களுக்கும் இது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...