திருப்பூரில் பிரபல நகை அடகு கடையில் அரிவாளை காட்டி கொள்ளையடித்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை!

திருப்பூர்: திருப்பூரில் பிரபல நகை அடகு கடையில் அரிவாளை காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் பிரபல நகை அடகு கடையில் அரிவாளை காட்டி கொள்ளையடித்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி குமரன் சாலை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இங்கு தனியார் நகை அடகு கடையின் கிளை (அட்டிகா கோல்டு லோன்) அமைந்துள்ளது.



இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கடைக்குள் ஹெல்மெட் அணிந்தபடி நுழைந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி நகை அடகு வைப்பவர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.

அரிவாளைக் கொண்டு மிரட்டியதால் ஊழியர்கள் அச்சம் அடைந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். இதனையடுத்து, அந்நிறுவனத்தின் மேலாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் பதிவாகி இருந்த நபர் முன்னதாக பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுபூலுவப்பட்டி பகுதியை சேர்ந்த அழகுராஜ் என்பது தெரியவந்தது. இவர் திருடிய நகைகளை இங்கு அடகு வைத்து வந்துள்ளார். அப்போது, நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...