கோவையில் இளம் பெண்ணை நிர்வாணப் படுத்தி நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை: கோவையில் இளம் பெண்ணை நிர்வாணப் படுத்தி நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் இளம் பெண்ணை நிர்வாணப் படுத்தி நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

கோவை வடவள்ளி காமதேனு நகர் பகுதியில் வசித்து வருபவர் கமலா (51). இவரது மகள் சரண்யா (29) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் மகளிர் குழுவ உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில், பழைய இரு சக்கர வாகனம் வாங்க பணம் தேவைப்படுவதாகச் தாயிடம் சரண்யா 10,000 ரூபாய் கேட்டு உள்ளார். பணம் பெற்று கொள்ள சம்மதித்த நிலையில், தனக்கு தெரிந்த ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வரும் 37 வயதுடைய நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ன்பவரை வாகனம் வாங்குவது தொடர்பாக வர சொல்லி அழைத்துள்ளார். 

மதியம் இரண்டு மணி அளவில் நவீன் கமலாவின் வீட்டிற்கு வந்தபோது, அவர் பின்னாலேயே முகமூடி அணிந்த நிலையில் வீட்டின் உள்ளே நுழைந்த ஐந்து நபர்கள் கதவை பூட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

நவீன், கமலா, சரண்யா ஆகியோரிடம் இருந்து பன்னிரெண்டரை பவுன் தங்க நகை, செல்போன் மற்றும் எட்டாயிரம் ரூபாய் கொள்ளை அடித்தவர்கள் சரண்யா மற்றும் நவீனை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்து உள்ளனர்.

இது குறித்து யாரிடம் சொல்லக் கூடாது என மிரட்டியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து நவீன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து தப்பிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...