தொழிலாளர் நலச்சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பொது முடக்கத்தை அறிவித்துவிட்டு தொழிலாளர் நலச்சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலகெங்கிலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, தொழிலாளர் நலச்சட்டங்களை பறிப்பது என தொழிலாளர் விரோத நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் இதனை கண்டித்து நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன இயக்கங்களை நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது.

இதன் ஒரு பகுதியாக, கோவை இருகூர் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருப்புக்கொடி ஏந்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராடிப்பெற்ற வேலை நேரத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும், முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்த கூடாது, ஊரடங்கு காலம் முழுமைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் வழங்கிட வேண்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வசதிகளை செய்து கொடுக்கப்பட வேண்டும், சொந்த ஊருக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்களாக எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைகள் என கோவையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை முழக்க போராட்டம் நடைபெற்றதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...