ஊரடங்கில் பாதிக்கப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோவை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: ஊரடங்கில் பாதிக்கப்பட்ட விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சோமனூர், கருமத்தம்பட்டி, தெக்கலூர் பகுதிகளில் சுமார் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவை இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் 50 நாட்களுக்கும் மேலாக விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. விசைத்தறிகள் இயங்காத காரணமாக வருமானம் இன்றி பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமலும் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக வட மாநிலங்களுக்கு உற்பத்தி செய்த ஜவுளி துணிகளை அனுப்ப முடியாத சூழல் உள்ளதாகவும் மற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது போல விசைத்தறி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மின்சார கட்டணத்தை ரத்து செய்தது போல் இங்குள்ள சிறு குறு விசைத்தறி உரிமையாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...