திருப்பூர்: தமிழகத்தில் உள்ள கோவில்களை தக்க ஏற்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்க, வரும் 26ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் லட்சக்கணக்கான கோவில்கள் உள்ள நிலையில் பெரிய கோயில்களைத் தவிர மற்ற கோவில்களில் கூட்டம் வருவது குறைவான ஒன்று எனவும் சில கோவில்கள் தனியார் கட்டுப்பாட்டில் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், கிராம கோவில்களில் வரக்கூடிய கூட்டம் குறைவாக தான் இருக்கும் என்பதால் கோவில்களை திறந்து பக்தர்கள் வழிபட வழிமுறைகளை பின்பற்றி அரசு அதிகாரம் வழங்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் மக்களின் மன அழுத்தம் குறையும் எனவும் இந்த விவகாரத்தில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிடில் வரும் 26ம் தேதி அனைத்து கோவில் வாசல்களிலும் கற்பூரம் ஏற்றி தோப்புகரணம் போட்டு வழிபாடு போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.