திருப்பூர்: 8 மணி நேரம் வேலை திட்டத்தை 12 மணி நேரமாக்க கூடாது என தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் 150 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: 8 மணி நேரம் வேலை திட்டத்தை 12 மணி நேரமாக்க கூடாது என தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் 150 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் 8 மணி நேர வேலை திட்டத்தை 12 மணி நேரம் ஆக்கக்கூடாது, மாவட்ட நலவாரிய கண்காணிப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும், சம்பள குறைப்பு செய்யக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.