பணி நேரத்தை அதிகரிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்க அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பணி நேரத்தை அதிகரிக்க கூடாது, பொது திறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: பணி நேரத்தை அதிகரிக்க கூடாது, பொது திறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கை பதாகைகளை கழுத்தில் அணிந்தபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாவட்ட தொழிற்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் கூறுகையில், நிதியமைச்சர் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று விடுவதாக அறிவித்துள்ளார். இதனால் துறைகள் அரசிடம் இருந்தாலும் அதிகாரம் தனியாரிடம் இருக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி முதலாளிகள் அனைவரும் சேர்ந்து வேலையாட்களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் ஆக்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அரசு ஏற்கக்கொள்ள கூடாது என்றவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் அவர்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், அவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.7,500 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருவதாக கூறினார்.

தங்களது கோரிக்கையை அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் என்பது தொழிற்சங்க அமைப்பினால் முடிவு எடுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் நடைபெறும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...