தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலத்திற்கு கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது - பாஜக சார்பில் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலத்திற்கு கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது என பா.ஜ.க சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலத்திற்கு கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது என பா.ஜ.க சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் 25 மண்டல தலைவர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லி அலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் நிர்பந்தம் செய்வதாகவும் இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம் சாட்டினார்.



பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் 3 மாத கால அவகாசம் அளித்து அவர்கள் பணம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், கடனுதவி பெற்ற சுயஉதவி குழுவினர் மற்றும் தொழில் கடன் வாங்கியவர்களை கடனை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதை தவிர்த்து அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...