கோவை: கோவை மாவட்ட நடன குழு சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட நடன குழு சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தொற்று வேகமாக பரவி நிலையில் அதனை கட்டுபடுத்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன. மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையின் பல்வேறு இடங்களில் நடன மற்றும் நாடக குழுவினர் மூலம் விழிப்புணர்வு நடன, நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், சிங்காநல்லூர், புளியகுளம், உக்கடம், காந்திப்பார்க், பூ மார்க்கெட், கணபதி, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம், டவுன்ஹால், சிந்தாமணி ஆகிய 10 இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடக நடன கலைஞர்கள் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
கோவை மாநகர காவல் ஆணையர் வைரஸ் தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உத்தரவிட்டதின் பேரில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடன மற்றும் நாடக நிகழ்ச்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நடன நாடக காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்ததால் வாகனங்களில் வந்த மக்கள் அனைவரும் இறங்கி வந்து கண்டுகளித்தனர். இந்த நடன நிகழ்ச்சிகளை சமூக இடைவெளி விட்டு நின்று கண்டு களிக்கும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்புடன் நிகழ்ச்சிகளை மேற்கொள்ள செய்தது குறிப்பிடத்தக்கது.