கோவை: கோவையில் இருந்து பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு இதுவரை 21 சிறப்பு ரயில்கள் மூலம் 21,293 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கோவை: கோவையில் இருந்து பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு இதுவரை 21 சிறப்பு ரயில்கள் மூலம் 21,293 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு இதுவரை 21 சிறப்பு ரயில்கள் மூலம் 21,293 தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பீகார் மாநிலத்திற்கு 9 சிறப்பு ரயிலும், உத்தரபிரதேசத்துக்கு 4 சிறப்பு ரயில்களும், ஒடிசாவிற்கு 3 ரயிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு 2 ரயில்களும், அசாம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு தலா ஒரு ரயில் மூலம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பீகார் மாநிலத்திற்கு இன்று இரவு 8 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் செல்கிறது. சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் இவர்கள் பயண செலவிற்கு மாநில அரசு செய்துள்ளது.
முன்னதாக, ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.