சென்னை: பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசியல் தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர், நக்கீரன் மற்றும் முரசொலி ஆகிய பத்திரிகைகளின் மீது, 2012-ல் இருந்து பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. அவதூறு வழக்குகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, பத்திரிகைகள், ஊடகங்கள் மீது தமிழக அரசு தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.