ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் - பி.ஆர்.நடராஜன் எம்பி

கோவை: ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ஓட்டுனர்கள் தாமாக முன் வந்து ஆட்டோக்களை இயக்குவார்கள் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் ஓட்டுனர்கள் தாமாக முன் வந்து ஆட்டோக்களை இயக்குவார்கள் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அரசு அறிவித்த 52 நாட்கள் ஊரடங்கை சிறப்பாக அமல்படுத்தியதாகவும் ஆனால், ஆட்டோ சங்கங்களின் ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அரசாங்கம் அமைத்த 52 தொழில் நலவாரியங்களில் முக்கியமாக ஆட்டோ மற்றும் கட்டிட தொழிலாளர் நல வாரியத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையிலும் ஆட்டோக்கள் இயங்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு வங்கிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாக என தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கையான ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் உதவி தொகையை கொடுத்து உதவ வேண்டும் எனவும் ஜூன் 1ம் தேதி முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்றார். இல்லையெனில் ஆட்டோ சங்கங்கள் அவர்களாக முன்வந்து ஆட்டோக்களை இயக்க முன்வருவார்கள். ஆகையால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இதே போல் மற்றொரு பிரச்சைனையாக இருப்பது மாதர் சங்கங்களின் மூலம் பெண்களுக்காக பெறப்பட்ட கடன்களை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டுமென்று வங்கிகள் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் எவ்வித வேலையும் இன்றி தவித்து வந்த நிலையில், தளர்வு அறிவித்த சில நாட்களிலேயே கடன்களை திருப்பி செலுத்துமாறு கூறுவது கடன் பெற்றவர்களுக்கு மிகவும் நெருக்கடியாக உள்ளது. எனவே கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் இதையும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...