திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

திருப்பூர்: திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் இருந்து சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூரில் தங்கியிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் விருப்பத்தின் பேரில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருப்பூரை அடுத்த குணங்கள்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 300க்கும் மேற்பட்ட பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.



இதனிடையே இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்திற்க்கு செல்ல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பதிவு செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தங்கள் சொந்த மாநிலத்திற்குச் செல்ல, மாவட்ட நிர்வாகம் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியும், உடனடியாக இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க இரயில் வசதி செய்து தரக்கோரி, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், திருப்பூரை அடுத்த குணங்கள்பாளையம் பிரிவு அருகே 200 க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...