கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வெள்ளலூரில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.168 கோடி மதிப்பில், 61.62 ஏக்கரில், புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுவகையும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தார், கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மாநகராட்சியுடன் இணைந்து பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் மற்றும் குடிநீர் இணைப்பு பணிகள் நடைபெறுவதையும், முத்தண்ணன் குளக்கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆப்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகர பொறியாளர் ஆ.இலட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.