Update: அட்டப்பாடியில் உள்ள தமிழக மாணவர்கள் ஆனைக்கட்டி வழியாக தேர்வெழுத வர பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்

கோவை: அட்டப்பாடி பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் இ பாஸ் பெற்று வந்தாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் இதனால் தேர்வெழுத வருவதில் சிக்கல் எழுந்தது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியை தொடர்ந்து, அவர்களுக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.


கோவை: அட்டப்பாடி பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் இ பாஸ் பெற்று வந்தாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் இதனால் தேர்வெழுத வருவதில் சிக்கல் எழுந்தது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியை தொடர்ந்து, அவர்களுக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ பாஸ் பெற்று பாலக்காடு, வாளையார், கோவை வழியாக 180 முதல் 200 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பது குறித்தும், ஆனைக்கட்டி வழியாக அனுமதி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை குறித்தும் செய்திகள் வெளியானது.

கோவை மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. தமிழகத்தை ஒட்டி கேரளாவிற்குள் அமைந்துள்ள அட்டப்பாடி, சோலையூர், அகழி, கூலிக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ் பழங்குடிகள் மற்றும் மற்ற தமிழ் மாணவர்களும் பயின்று வருகின்றனர்.

அட்டப்பாடி பகுதியில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் 21 பேரும், சின்னத்தடாகம் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் 11 ம் வகுப்பு தேர்வெழுத வருவதில் சிக்கல் எழுந்தது.

இ பாஸ் பெற்று வந்தாலும் ஆனைக்கட்டி வழியாக தமிழகம் வர கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இ பாஸ் பெற்று பாலக்காடு, வாளையார், கோவை வழியாக 180 முதல் 200 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பது குறித்தும், ஆனைக்கட்டி வழியாக அனுமதி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை குறித்தும் செய்திகள் வெளியானது.

மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி ஆனைக்கட்டி வழியாக தேர்வு எழுத வர ஏற்பாடு செய்யப்படுமென கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி உறுதியளித்தார். இதுதொடர்பாக பாலக்காடு மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், தேர்வெழுத கேரள மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளியை தொடர்பு கொண்டு, ஆனைகட்டி பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்க வலியுறுத்தினார். இதன் பேரில் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கில் மாநில எல்லைகளை தாண்டி செல்ல மாணவர்களுக்கு தளர்வு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹால் டிக்கெட்டுகளை காட்டி தேர்வெழுத மாணவர்கள் மாநில எல்லைகளை கடந்து செல்லவும் மாணவர்களுடன் ஒருவர் சென்று வரவும் அனுமதி வழங்கியுள்ளார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...