வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணையில் நகராட்சி மண்டல இயக்குநர் ஆய்வு!

கோவை: வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணையை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமான அக்காமலை தடுப்பணையை நகராட்சிகளின் மண்டல இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகருக்கு அக்காமலை தடுப்பணையில் இருந்து குடி நீர் விநியோகிக்கப்படுகிறது. அக்காமலை புல்வெளியில் இருந்து ஊற்றின் மூலம் வரும் நீர் கருமலை தேயிலை தோட்டத்தில் தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இங்கிருந்து குழாய் மூலம் இயற்கை உந்து சக்தி மூலம் வால்பாறை நகரில் உள்ள குடிநீர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.



தற்போது வால்பாறை நகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை போக்கிட வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவன்ராஜ் தடுப்பணையை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் ஒரு கட்டமாக, நகராட்சிகளின் மண்டல இயக்குநர் சுல்தானா மற்றும் நகராட்சிகளின் மண்டல பொறியாளர் வெங்கடேஷ் ஆகியோர் அக்காமலை தடுப்பணையை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அக்காமலை தடுப்பணையின் நீர் தேக்க பகுதியை விரிவாக்குவது, அணையின் கரைகளை வலுவாக்குவது மேலும் குடிநீர் விநியோக குழாய்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆய்வில், நகராட்சி மண்டல இயக்குநர் திருப்பூர் சுல்தானா, மண்டல பொறியாளர் வெங்கடேஷ். நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவன்ராஜ், நகராட்சி பொறியாளர் சரவணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...