கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு 30 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள்! போலீசார் விசாரணை

கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு 30 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு 30 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் பணத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஜி என் மில்ஸ் அடுத்த உருமாண்டம்பாளையம் ராகவேந்திரா காலனியில் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து மனைவி செபஸ்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுடன் வேலைக்கார பெண் அருள்மேரி உடனிருந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் வீட்டின் மதில் சுவரை தாண்டி குதித்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டின் முன்புற கதவை இரும்பு கம்பி கொண்டு உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.



உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வேலைக்கார பெண் அருள்மேரி மற்றும் மார்ட்டின் சகோதரர் வேதமுத்து அவரது மனைவி செபஸ்தி ஆகியோரை கட்டிப்போட்டு பீரோவை திறந்து அதிலிருந்த 30 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து ஒருவருக்கொருவர் தங்களது கைகளை அவிழ்த்து துடியலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களில் 4 பேரும் இந்தியில் பேசி கூறப்பட்டதைத் தொடர்ந்து இது வட மாநிலத்தவரின் கைவரிசையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாட்டரி அதிபர் மார்ட்டின் சகோதரரை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...