நீலகிரி: நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் 17 கோடியே 43 லட்சம் மதிப்பிலான கோவிட் 19 சிறப்பு கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் வழங்கினர்.

மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியங்கள் இன்று வரை மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் தொழில் புரிந்து வருமானத்தை ஈட்டி குடும்பத்தை காத்து வரும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், பணிமனை தொழிலாளர்கள் என மேலும் பல சுய தொழில் புரிகின்ற 26,640 பேருக்கு கோவிட் 19 சிறப்பு கடனுதவியாக 17.43 கோடி வழங்கப்பட்டது.